• Apr 02 2025

அரசியலுக்கு 'குட் பாய்'! தம்மிக்க பெரேரா எடுத்த அதிரடித் தீர்மானம்

Chithra / Oct 4th 2024, 7:32 am
image

 

பொதுஜன பெரமுணவின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக விலக தீர்மானித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகும் தனது தீர்மானம் குறித்து கடந்த சில நாட்களாக தனக்கு நம்பிக்கையானவர்களுடன் கலந்துரையாடல்களை  மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னரே குறித்த தீர்மானத்தை உறுதி செய்துள்ளார்.

இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான தம்மிக பெரேரா நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் தனக்குச் சொந்தமான பல நிறுவனங்களில் இருந்து விலகிக் கொண்டிருந்தார்.

எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் பதவிகளுக்கு நியமிக்கபட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா , ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த யோசனையை விட்டு அவர் அதிலிருந்து விலக்கிக் கொண்டார்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்‌ச படுதோல்வியைத் தழுவியதை அடுத்து,  அரசியலில் இருந்து முற்று முழுதாக ஒதுங்கிக் கொள்ள தம்மிக்க பெரேரா தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

அரசியலுக்கு 'குட் பாய்' தம்மிக்க பெரேரா எடுத்த அதிரடித் தீர்மானம்  பொதுஜன பெரமுணவின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக விலக தீர்மானித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகும் தனது தீர்மானம் குறித்து கடந்த சில நாட்களாக தனக்கு நம்பிக்கையானவர்களுடன் கலந்துரையாடல்களை  மேற்கொண்டுள்ளார்.அதன் பின்னரே குறித்த தீர்மானத்தை உறுதி செய்துள்ளார்.இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான தம்மிக பெரேரா நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் தனக்குச் சொந்தமான பல நிறுவனங்களில் இருந்து விலகிக் கொண்டிருந்தார்.எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் பதவிகளுக்கு நியமிக்கபட்டுள்ளார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா , ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த யோசனையை விட்டு அவர் அதிலிருந்து விலக்கிக் கொண்டார்.இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்‌ச படுதோல்வியைத் தழுவியதை அடுத்து,  அரசியலில் இருந்து முற்று முழுதாக ஒதுங்கிக் கொள்ள தம்மிக்க பெரேரா தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now