நேற்றைய தினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசம் என்று கூறி விட்டு பின்னர் காசுக்கு ரிக்கெட் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது இரசிகர்களது மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது ஒருவர் 5,6 கதிரைகளை அடுக்கி விட்டு மேல ஏறி நின்றவாறும் அமர்ந்திருந்தவாறும் இசை நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
இவ்வாறு பலர் செயற்பட்டனர். இதனால் காசு கொடுத்துவிட்டு கதிரை இல்லாது பலர் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு கடமையில் இருந்த நொதேண் யுனியின் மாணவர்களிடம் இது குறித்து பார்வையாளர்கள் முறையிட்டார்கள். ஆனால் அவர்கள் "இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், அங்கு கல்வி கற்பதால் தான் கடமைக்கு அமர்த்தப்பட்டதாகவும், மேற்பார்வையாளர்களிடம் தான் இது குறித்து கூற வேண்டும் என்றும் கூறினர்.
இதனை கேட்ட பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் யார் என்று கேட்டனர். ஆனால் மேற்பார்வையாளர்கள் யார் என்றே தங்களுக்கு தெரியாது என்றும் கூறினர்.
காசினை பெற்றுவிட்டு இவ்வாறு சரியாக திட்டமிடாத செயற்பாடானது பார்வையாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிஹரனின் நிகழ்ச்சியில் எழுந்தது சர்ச்சை - காசு கொடுத்து விட்டு கதிரை இல்லாது தவித்த பார்வையாளர்கள். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசம் என்று கூறி விட்டு பின்னர் காசுக்கு ரிக்கெட் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது இரசிகர்களது மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது ஒருவர் 5,6 கதிரைகளை அடுக்கி விட்டு மேல ஏறி நின்றவாறும் அமர்ந்திருந்தவாறும் இசை நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இவ்வாறு பலர் செயற்பட்டனர். இதனால் காசு கொடுத்துவிட்டு கதிரை இல்லாது பலர் அவதிப்பட்டனர்.இந்நிலையில் அங்கு கடமையில் இருந்த நொதேண் யுனியின் மாணவர்களிடம் இது குறித்து பார்வையாளர்கள் முறையிட்டார்கள். ஆனால் அவர்கள் "இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், அங்கு கல்வி கற்பதால் தான் கடமைக்கு அமர்த்தப்பட்டதாகவும், மேற்பார்வையாளர்களிடம் தான் இது குறித்து கூற வேண்டும் என்றும் கூறினர்.இதனை கேட்ட பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் யார் என்று கேட்டனர். ஆனால் மேற்பார்வையாளர்கள் யார் என்றே தங்களுக்கு தெரியாது என்றும் கூறினர்.காசினை பெற்றுவிட்டு இவ்வாறு சரியாக திட்டமிடாத செயற்பாடானது பார்வையாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.