• Nov 26 2024

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை...!

Chithra / May 17th 2024, 9:08 am
image



இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள குறித்த பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பரீட்சை திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வினாத்தாளில் தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இது தொடர்பான சம்பவங்களுக்கு முகம் கொடுத்த மாணவர்கள் குறித்து தனித்தனியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை. இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள குறித்த பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பரீட்சை திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வினாத்தாளில் தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இது தொடர்பான சம்பவங்களுக்கு முகம் கொடுத்த மாணவர்கள் குறித்து தனித்தனியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement