• Jan 16 2025

இறக்குமதி செய்திருக்கும் அரிசியை சமைத்து சாப்பிட்டு காட்டுங்கள் - அமைச்சருக்கு சவால் விடுத்த முக்கிய தரப்பு

Chithra / Jan 6th 2025, 9:07 am
image

 

இறக்குமதி செய்திருக்கும் சிவப்பு பச்சை அரிசி மக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறது. வர்த்தக அமைச்சர் இந்த அரிசி சமைத்து சாப்பிட்டு காட்டட்டும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் சந்தையில் மரக்கறி விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே மரக்கறி வகைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. 

அதேபோன்று வர்த்தக மத்திய நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மரக்கறி விலையைவிட அதிக விலைக்கே வெளிப்பிரதேசங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பல வருடங்களாக இந்த மாபியா இடம்பெற்று வருகிறது. நுகர்வோரை உரிஞ்சும் மாபியாவை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.

அதேபோன்று சிவப்பு பச்சை அரிசி இன்று சந்தையில் இல்லை. அதேநேரம் சந்தையில் இருக்கும் இறக்குமதி செய்திருக்கும் சிவப்பு பச்சை அரிசி மிருகங்களுக்கும் சாப்பிட முடியாத நிலையிலேயே இருக்கிறது. வர்த்தக அமைச்சர் முடியுமானால் இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டு காட்டட்டும்.

அவ்வாறு செய்தால் எனது பதவியில் இருந்து விலகுவேன். 

ஆனால் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் வெள்ளை பச்சை அரிசி உணவுக்கு எடுத்துக்கொள்ள முடியுமான வகையில் இருக்கிறது. 

தொற்றா நோயாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள சிவப்பு பச்சை அரிசியே பயன்படுத்துகின்றனர். ஆனால் இன்று அவர்களுக்கு இந்த அரிசி இல்லாமல் இருக்கிறது.

அதனால் நான் தெரிவிக்கும் விடயம் பொய் என்றால் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணை மேற்கொண்டு என்னை கைது செய்யட்டும். 

சிற்றுண்டிச்சாலையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய்யே பயன்படுத்தப்படுகிறது. 

அரச சிற்றுண்டிச்சாலைகளில் குறைந்த விலைக்கு உணவு வழங்க வேண்டும் என தெரிவிப்பதால், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் இவ்வாறான தரம் குறைந்த குறைந்த விலைக்கு இருக்கும் உணவுப்பொருட்களை பயன்படுத்தி வருகிறனர். இந்த நிலைமையை  அரசாங்கம் மாற்ற வேண்டும் என்றார்.

இறக்குமதி செய்திருக்கும் அரிசியை சமைத்து சாப்பிட்டு காட்டுங்கள் - அமைச்சருக்கு சவால் விடுத்த முக்கிய தரப்பு  இறக்குமதி செய்திருக்கும் சிவப்பு பச்சை அரிசி மக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறது. வர்த்தக அமைச்சர் இந்த அரிசி சமைத்து சாப்பிட்டு காட்டட்டும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டில் சந்தையில் மரக்கறி விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே மரக்கறி வகைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று வர்த்தக மத்திய நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மரக்கறி விலையைவிட அதிக விலைக்கே வெளிப்பிரதேசங்களில் விற்பனை செய்யப்படுகிறது.பல வருடங்களாக இந்த மாபியா இடம்பெற்று வருகிறது. நுகர்வோரை உரிஞ்சும் மாபியாவை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.அதேபோன்று சிவப்பு பச்சை அரிசி இன்று சந்தையில் இல்லை. அதேநேரம் சந்தையில் இருக்கும் இறக்குமதி செய்திருக்கும் சிவப்பு பச்சை அரிசி மிருகங்களுக்கும் சாப்பிட முடியாத நிலையிலேயே இருக்கிறது. வர்த்தக அமைச்சர் முடியுமானால் இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டு காட்டட்டும்.அவ்வாறு செய்தால் எனது பதவியில் இருந்து விலகுவேன். ஆனால் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் வெள்ளை பச்சை அரிசி உணவுக்கு எடுத்துக்கொள்ள முடியுமான வகையில் இருக்கிறது. தொற்றா நோயாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள சிவப்பு பச்சை அரிசியே பயன்படுத்துகின்றனர். ஆனால் இன்று அவர்களுக்கு இந்த அரிசி இல்லாமல் இருக்கிறது.அதனால் நான் தெரிவிக்கும் விடயம் பொய் என்றால் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணை மேற்கொண்டு என்னை கைது செய்யட்டும். சிற்றுண்டிச்சாலையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய்யே பயன்படுத்தப்படுகிறது. அரச சிற்றுண்டிச்சாலைகளில் குறைந்த விலைக்கு உணவு வழங்க வேண்டும் என தெரிவிப்பதால், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் இவ்வாறான தரம் குறைந்த குறைந்த விலைக்கு இருக்கும் உணவுப்பொருட்களை பயன்படுத்தி வருகிறனர். இந்த நிலைமையை  அரசாங்கம் மாற்ற வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement