சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் லங்கா சதோச மூலம் சலுகை விலையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள 1,700 ரூபாயினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும்.
பெருந்தோட்ட வீட்டு அபிவிருத்திகளுக்காக 4268 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
வட மாகாணத்தின் கிராமிய பாலங்கள்,அபிவிருத்திக்காக 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு 5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
இலங்கைக்கான புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதிதெரிவித்தார்.
அத்துடன் டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையை நிறுவுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலைய முனையம் 2 இன் பணிகள் ஆரம்பமாகும்
அதன் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத் துறைக்காக டிஜிட்டல் டிக்கெட் முறை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
‘மெட்ரோ’ என்ற புதிய நிறுவனத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்திற்காக 100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை நாணயம் மற்றும் நோட்டு இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது. ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு. தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள்.
இலஞ்சம் வாங்குபவர்கள் அனைவரும் பயப்படும் சமூகத்தை உருவாக்குவோம்.
தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கே அதிகளவு தண்டனைகளை வழங்கியுள்ளார். வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
இந்த நாட்டில் இன முரண்பாடுகள் இனி இல்லை. மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லை
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம், ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருப்போம். இந்த அழகிய புண்ணிய பூமியை நமது தாய்நாடு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும் - வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் லங்கா சதோச மூலம் சலுகை விலையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள 1,700 ரூபாயினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும்.பெருந்தோட்ட வீட்டு அபிவிருத்திகளுக்காக 4268 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்வட மாகாணத்தின் கிராமிய பாலங்கள்,அபிவிருத்திக்காக 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு 5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இலங்கைக்கான புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதிதெரிவித்தார்.அத்துடன் டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையை நிறுவுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.ஜப்பானிய உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலைய முனையம் 2 இன் பணிகள் ஆரம்பமாகும்அதன் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேவேளை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத் துறைக்காக டிஜிட்டல் டிக்கெட் முறை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் ‘மெட்ரோ’ என்ற புதிய நிறுவனத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்திற்காக 100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை நாணயம் மற்றும் நோட்டு இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது. ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு. தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள்.இலஞ்சம் வாங்குபவர்கள் அனைவரும் பயப்படும் சமூகத்தை உருவாக்குவோம்.தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கே அதிகளவு தண்டனைகளை வழங்கியுள்ளார். வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும்வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.இந்த நாட்டில் இன முரண்பாடுகள் இனி இல்லை. மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லைநாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம், ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருப்போம். இந்த அழகிய புண்ணிய பூமியை நமது தாய்நாடு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.