அனுராதபுரம் - பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வெலிவேரிய, கொச்சிவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கணவனும் 53 வயதுடைய அவரது மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஹெம்மாத்தகம - மாவனெல்லை வீதியில் தெவனகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று வீதியின் வலது பக்கமாக திரும்பி முன்னாள் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டி பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அக்குரஸ்ஸ - காலி வீதியில் கியாடுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோர விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி அனுராதபுரம் - பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் வெலிவேரிய, கொச்சிவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கணவனும் 53 வயதுடைய அவரது மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் ஹெம்மாத்தகம - மாவனெல்லை வீதியில் தெவனகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று வீதியின் வலது பக்கமாக திரும்பி முன்னாள் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது முச்சக்கரவண்டி பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை அக்குரஸ்ஸ - காலி வீதியில் கியாடுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கெப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.