• Sep 20 2024

அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு – சிக்கலில் சிக்கியுள்ள அரசு.!samugammedia

Sharmi / Jun 13th 2023, 10:19 am
image

Advertisement

அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

எந்தவொரு மாற்று வழியையும் தயாரிக்காமல் அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவை தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம், ஓட்டுநர்களிடமிருந்தோ அல்லது தொழிற்சங்கத்திடமிருந்தோ எந்தவொரு கருத்துக்களையும் பொற்றுக்கொள்ளவில்லை எனவும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் சங்கத்தின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையில் இவ்வாறான தீர்மானங்களினால் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வது பிரச்சினைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டாவிடம் கேள்வி எழுப்பபட்ட போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு, அரை சொகுசு தனியார் பேருந்துகளை இடைநிறுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போது அதனை தற்போது வரை அரசாங்கத்தினால் செயற்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு – சிக்கலில் சிக்கியுள்ள அரசு.samugammedia அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.எந்தவொரு மாற்று வழியையும் தயாரிக்காமல் அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவை தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம், ஓட்டுநர்களிடமிருந்தோ அல்லது தொழிற்சங்கத்திடமிருந்தோ எந்தவொரு கருத்துக்களையும் பொற்றுக்கொள்ளவில்லை எனவும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் சங்கத்தின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையில் இவ்வாறான தீர்மானங்களினால் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வது பிரச்சினைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இந்த விடயம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டாவிடம் கேள்வி எழுப்பபட்ட போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு, அரை சொகுசு தனியார் பேருந்துகளை இடைநிறுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போது அதனை தற்போது வரை அரசாங்கத்தினால் செயற்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement