• Nov 15 2025

உடையார்கட்டு பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட யோகட் தொழிற்சாலைக்கு நீதிமன்றம் அபராதம்

dorin / Nov 14th 2025, 7:05 pm
image

உடையார்கட்டு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த யோகட் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் அடிப்படையில் நீதிமன்றம் இன்று 25,000 ரூபா தண்டம் வழங்கியுள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின்போது,

Medical certificate இல்லாமை,Food premises CAP approval இன்மை, முகச்சவரம் செய்யாமை,தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதழ் இன்மை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அங்கு கண்டறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் இன்று மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தார்.

வழக்குகள்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து நீதிமன்றம் 25000 ரூபா அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

உடையார்கட்டு பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட யோகட் தொழிற்சாலைக்கு நீதிமன்றம் அபராதம் உடையார்கட்டு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த யோகட் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் அடிப்படையில் நீதிமன்றம் இன்று 25,000 ரூபா தண்டம் வழங்கியுள்ளது.புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின்போது,Medical certificate இல்லாமை,Food premises CAP approval இன்மை, முகச்சவரம் செய்யாமை,தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதழ் இன்மை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அங்கு கண்டறியப்பட்டன.இதனைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் இன்று மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தார்.வழக்குகள்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து நீதிமன்றம் 25000 ரூபா அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement