நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரில் 26 மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் விதித்தது ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.
வழக்கினை ஆராய்ந்த நீதவான் நளினி சுபாஸ்கரன் 26 மீனவர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் இரு படகுகளின் ஓட்டிகளுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையும் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
யாழில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரில் 26 மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் விதித்தது ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீனவர்கள் மன்றிற்கு அழைத்துவரப்பட்டனர்.வழக்கினை ஆராய்ந்த நீதவான் நளினி சுபாஸ்கரன் 26 மீனவர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.அத்துடன் இரு படகுகளின் ஓட்டிகளுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையும் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.