• Nov 13 2025

சண்டியராக ஆட்சிக்கு வந்து, பின் கதவு வழியாக தப்பித்து ஓடிய கோட்டாபய! சாமர சம்பத் பகிரங்கம்

Chithra / Nov 10th 2025, 4:01 pm
image


சண்டியராக ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச பின் கதவு வழியாக தப்பித்து படகுமூலம் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

இந்த அரசாங்கம் பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை குழப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வியாபாரங்கள் பற்றி எந்தவித புரிதலும் இன்றி அமைச்சர் தீர்மானங்களை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதியில் கருவேப்பிலை கட்டு ஒன்றையேனும் விற்பனை செய்த அனுபவம் தமக்கு உண்டு.

மக்கள் எதிர்ப்பு வெளியிடும் திட்டங்களை நாம் முன்னெடுப்பது பொருத்தமற்றது.

இந்த சந்தர்ப்பங்களில் கௌரவத்தை பார்க்காது ஒன்று, இரண்டு அடிகள் பின்வாங்குவதில் பிழையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பலம் பொருந்திய சண்டியர் என ஆட்சி பீடம் ஏறிய கோட்டபாய பின் கதவு வழியாக தப்பிச் செல்ல நேரிட்டதனை நினைவு படுத்துவதாக சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார். 

சண்டியராக ஆட்சிக்கு வந்து, பின் கதவு வழியாக தப்பித்து ஓடிய கோட்டாபய சாமர சம்பத் பகிரங்கம் சண்டியராக ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச பின் கதவு வழியாக தப்பித்து படகுமூலம் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இந்த அரசாங்கம் பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை குழப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.வியாபாரங்கள் பற்றி எந்தவித புரிதலும் இன்றி அமைச்சர் தீர்மானங்களை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.வீதியில் கருவேப்பிலை கட்டு ஒன்றையேனும் விற்பனை செய்த அனுபவம் தமக்கு உண்டு.மக்கள் எதிர்ப்பு வெளியிடும் திட்டங்களை நாம் முன்னெடுப்பது பொருத்தமற்றது.இந்த சந்தர்ப்பங்களில் கௌரவத்தை பார்க்காது ஒன்று, இரண்டு அடிகள் பின்வாங்குவதில் பிழையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.பலம் பொருந்திய சண்டியர் என ஆட்சி பீடம் ஏறிய கோட்டபாய பின் கதவு வழியாக தப்பிச் செல்ல நேரிட்டதனை நினைவு படுத்துவதாக சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement