• Nov 13 2025

மருத்துவர்களை விட விலங்குகளுக்கே பாதீட்டில் சாதகம்: விசேட வைத்திய நிபுணர் ஆவேசம்!

Chithra / Nov 10th 2025, 2:46 pm
image

 

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ கடுமையாக விமர்சித்துள்ளார். 

குறித்த பாதீட்டில் விலங்கு நலனுக்குக் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வைத்திய நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பாதீட்டுத் திட்டத்தில், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நலனுக்காகப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இளம் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது அவர்களை ஊக்குவிப்பதற்கோ எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை, என வைத்தியர் சஞ்சீவ விமர்சித்துள்ளார். 

அத்துடன் இலங்கையின் முதன்மை சுகாதார சேவைகளைச் சர்வதேச மட்டத்தில் பேணுவதற்காக, கிராமப்புற மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை ஆயிரக்கணக்கான சுகாதார வல்லுநர்கள் இரவும் பகலும் அயராது உழைத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். 

ஆனால், இம்முறை அவர்களின் நலனுக்காக எந்தவித விசேட கவனமும் செலுத்தப்படாமை வருந்தத்தக்கது என அவர் தெரிவித்தார். 

 

மருத்துவர்களை விட விலங்குகளுக்கே பாதீட்டில் சாதகம்: விசேட வைத்திய நிபுணர் ஆவேசம்  2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ கடுமையாக விமர்சித்துள்ளார். குறித்த பாதீட்டில் விலங்கு நலனுக்குக் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வைத்திய நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாதீட்டுத் திட்டத்தில், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நலனுக்காகப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இளம் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது அவர்களை ஊக்குவிப்பதற்கோ எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை, என வைத்தியர் சஞ்சீவ விமர்சித்துள்ளார். அத்துடன் இலங்கையின் முதன்மை சுகாதார சேவைகளைச் சர்வதேச மட்டத்தில் பேணுவதற்காக, கிராமப்புற மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை ஆயிரக்கணக்கான சுகாதார வல்லுநர்கள் இரவும் பகலும் அயராது உழைத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். ஆனால், இம்முறை அவர்களின் நலனுக்காக எந்தவித விசேட கவனமும் செலுத்தப்படாமை வருந்தத்தக்கது என அவர் தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement