• Feb 04 2025

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக லபார் தாஹிர் நியமனம்

Chithra / Feb 3rd 2025, 7:12 am
image


மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர்  (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும்.

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக லபார் தாஹிர் நியமனம் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர்  (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும்.

Advertisement

Advertisement

Advertisement