மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தினை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்றையதினம்(15) இரவு இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப் போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
அந்தவகையில், கடந்த மாதம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில் சிறுகன்றுகளின் தாய் மாடுகளினை கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் திருடிச்சென்றிருந்தனர்.
அதேபோல் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான வளர்ப்பு மாடுகள் திருட்டு போயிருந்தது.
இதனையடுத்து குறித்த கால்நடை வளர்ப்பு உரிமையாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை.
இதனையடுத்து, மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனமொன்று நடமாடுவதை குறித்த கிராம மக்கள் அவதானித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்க முயற்சி செய்து பலனளிக்காத நிலையில் வாகன இலக்கத்தினை கண்காணித்து வைத்திருந்தனர்.
குறித்த வாகனம் நேற்றையதினம்(15) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சென்ற நிலையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டமையை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த வாகனத்தையும், சாரதியையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.
குறித்த வாகனத்தை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்குடியிருப்பில் மாயமாகும் மாடுகள்; மடக்கி பிடித்த இளைஞர்கள். மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தினை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்றையதினம்(15) இரவு இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப் போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. அந்தவகையில், கடந்த மாதம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில் சிறுகன்றுகளின் தாய் மாடுகளினை கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் திருடிச்சென்றிருந்தனர். அதேபோல் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான வளர்ப்பு மாடுகள் திருட்டு போயிருந்தது.இதனையடுத்து குறித்த கால்நடை வளர்ப்பு உரிமையாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை.இதனையடுத்து, மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனமொன்று நடமாடுவதை குறித்த கிராம மக்கள் அவதானித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்க முயற்சி செய்து பலனளிக்காத நிலையில் வாகன இலக்கத்தினை கண்காணித்து வைத்திருந்தனர். குறித்த வாகனம் நேற்றையதினம்(15) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சென்ற நிலையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டமையை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த வாகனத்தையும், சாரதியையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.குறித்த வாகனத்தை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.