• Oct 30 2024

யாழ் சாவகச்சேரியில் கப் வாகனத்தில் பயணித்த மாடுகள்...!அறுவர் கைது...!samugammedia

Sharmi / Apr 29th 2023, 1:20 pm
image

Advertisement

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த மாடுகள் இளைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஏ9 வீதி ஊடாக மாடுகளை ஏற்றி பயணித்த கப் வாகனத்தை பளை பொலிசார் முகமாலை பகுதியில் இடை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றம் உதவியாளர் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றி சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 மாடுகளில் ஒரு மாடு பசு என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


யாழ் சாவகச்சேரியில் கப் வாகனத்தில் பயணித்த மாடுகள்.அறுவர் கைது.samugammedia அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த மாடுகள் இளைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.ஏ9 வீதி ஊடாக மாடுகளை ஏற்றி பயணித்த கப் வாகனத்தை பளை பொலிசார் முகமாலை பகுதியில் இடை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றம் உதவியாளர் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றி சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த 7 மாடுகளில் ஒரு மாடு பசு என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement