• Sep 19 2024

கிளிநொச்சியில் 'போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும்' போட்டி நிகழ்வு!

Sharmi / Jan 3rd 2023, 3:09 pm
image

Advertisement

போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.

அதன் முன்னேற்பாடாக, குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி இன்று இடம்பெற்றது. இதன்போது 75 மாணவர்கள் பங்குபற்றினர்.

போட்டியின் நிறைவில் முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது மாணவர்கள் தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.

குறித்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

இதற்கான நிதி அனுசரணையை அபிசேக் பவுண்டேசன் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் 'போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும்' போட்டி நிகழ்வு போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.அதன் முன்னேற்பாடாக, குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி இன்று இடம்பெற்றது. இதன்போது 75 மாணவர்கள் பங்குபற்றினர்.போட்டியின் நிறைவில் முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது மாணவர்கள் தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.குறித்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான நிதி அனுசரணையை அபிசேக் பவுண்டேசன் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement