• Jan 07 2025

மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம் - போக்குவரத்து பெரும் பாதிப்பு

Chithra / Jan 3rd 2025, 12:38 pm
image

 மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சிறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வெல்லாவெளி பிரதேசத்தில் சிறு குளங்களிலும், நீர்நிலைகளிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக போரதீவு பற்று பிரதேச செயலகத்திற்கு முன் பக்கம் காணப்படும் நீர்நிலைகளில் சுமார் 07 முதலைகள் அளவில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வெல்லாவெளி, மண்டூர் பிரதேசம் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், 

வீதிகளிலும், குடியிருப்புகளை அண்டிய சூழலிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பினால் இரவு வேளைகளிலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம் - போக்குவரத்து பெரும் பாதிப்பு  மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சிறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.வெல்லாவெளி பிரதேசத்தில் சிறு குளங்களிலும், நீர்நிலைகளிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.குறிப்பாக போரதீவு பற்று பிரதேச செயலகத்திற்கு முன் பக்கம் காணப்படும் நீர்நிலைகளில் சுமார் 07 முதலைகள் அளவில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.வெல்லாவெளி, மண்டூர் பிரதேசம் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், வீதிகளிலும், குடியிருப்புகளை அண்டிய சூழலிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பினால் இரவு வேளைகளிலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement