• Jan 05 2025

சாவகச்சேரியில் சட்டவிரோத அகழப்படும் கண்டற் கற்கள்; பொலிஸாரும் உடந்தையா? இளங்குமரன் எம்.பி கேள்வி

Sharmi / Jan 3rd 2025, 12:31 pm
image

சாவகச்சேரி வேம்பிராய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்கள்,மண் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்த நிலையில் குறித்த பகுதியை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மக்களின் எதிர்ப்பையும் மீறி கனிய மணல்களையும், சுண்ணாம்பு கற்களையும் சட்டவிரோத கும்பல் ஒன்று தொடர்ச்சியாக அகழ்ந்து வந்துள்ளது.

கனிய வளங்கள் திணைக்களத்தின் தகவல்களின் படி எந்த ஒரு நிறுவனத்திற்கும் இரண்டு அடி ஆழத்திற்கு அகழ்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது.

எனினும் இங்கு பத்து அடிக்கு மேல் அகழப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நன்நீர் உவர் நீராக மாறக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

அதேவேளை, இந்த பகல் கொள்ளை கும்பலுக்கு அரச அதிகாரிகளும், பொலிஸாரும் உடந்தையாக இருந்திருப்பார்கள் என்று தாம் நம்புவதாக இளங்குமரன் தெரிவித்தார்.


சாவகச்சேரியில் சட்டவிரோத அகழப்படும் கண்டற் கற்கள்; பொலிஸாரும் உடந்தையா இளங்குமரன் எம்.பி கேள்வி சாவகச்சேரி வேம்பிராய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்கள்,மண் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்த நிலையில் குறித்த பகுதியை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,மக்களின் எதிர்ப்பையும் மீறி கனிய மணல்களையும், சுண்ணாம்பு கற்களையும் சட்டவிரோத கும்பல் ஒன்று தொடர்ச்சியாக அகழ்ந்து வந்துள்ளது.கனிய வளங்கள் திணைக்களத்தின் தகவல்களின் படி எந்த ஒரு நிறுவனத்திற்கும் இரண்டு அடி ஆழத்திற்கு அகழ்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது.எனினும் இங்கு பத்து அடிக்கு மேல் அகழப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நன்நீர் உவர் நீராக மாறக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.அதேவேளை, இந்த பகல் கொள்ளை கும்பலுக்கு அரச அதிகாரிகளும், பொலிஸாரும் உடந்தையாக இருந்திருப்பார்கள் என்று தாம் நம்புவதாக இளங்குமரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement