• Nov 25 2024

எல்லைதாண்டி மீன்பிடி..! கைதான இரு இந்திய மீனவர்களும் வழக்கு ஏதும் இன்றி உடன் விடுவிப்பு..!

Sharmi / Aug 2nd 2024, 9:09 am
image

யாழ். நெடுந்தீவுக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் ஏற்பட்ட விபத்தின்போது கைதான இரண்டு இந்திய மீனவர்களும் வழக்கு நடவடிக்கைகள் ஏதும் இன்றி உடனடியாகவே விடுவிக்கப்படுகின்றனர்.

எல்லை தாண்டிய இந்தியப் படகை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடிக்க முயன்றபோது கடற்படையினரின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காணாமல்போன சம்பவத்தில்  இரு மீனவர்கள் கடற்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட இரு மீனவர்களும் நேற்று ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரு மீனவர்களும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இன்றி இன்று விடுவிக்கப்படும் அதேநேரம் உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் உடற்கூற்றுப் பரிசோதனை இன்று இடம்பெறும் என்று வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைகள் இன்று முடிவுற்று நாளை சடலத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்போது உயிருடன் பிடிக்கப்பட்ட இரு மீனவர்களையும் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தச் சம்பவத்தில் காணாமல்போன நான்காவது மீனவர் இதுவரை மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லைதாண்டி மீன்பிடி. கைதான இரு இந்திய மீனவர்களும் வழக்கு ஏதும் இன்றி உடன் விடுவிப்பு. யாழ். நெடுந்தீவுக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் ஏற்பட்ட விபத்தின்போது கைதான இரண்டு இந்திய மீனவர்களும் வழக்கு நடவடிக்கைகள் ஏதும் இன்றி உடனடியாகவே விடுவிக்கப்படுகின்றனர்.எல்லை தாண்டிய இந்தியப் படகை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடிக்க முயன்றபோது கடற்படையினரின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காணாமல்போன சம்பவத்தில்  இரு மீனவர்கள் கடற்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட இரு மீனவர்களும் நேற்று ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரு மீனவர்களும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இன்றி இன்று விடுவிக்கப்படும் அதேநேரம் உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் உடற்கூற்றுப் பரிசோதனை இன்று இடம்பெறும் என்று வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைகள் இன்று முடிவுற்று நாளை சடலத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்போது உயிருடன் பிடிக்கப்பட்ட இரு மீனவர்களையும் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.இந்தச் சம்பவத்தில் காணாமல்போன நான்காவது மீனவர் இதுவரை மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement