• May 19 2024

மலையக மக்களின் வரலாற்று வலிகளை மாற்றியமைத்தது இ.தொ.காவே- ஜெனிவாவில் ஜீவன் உரை! samugammedia

Tamil nila / Oct 20th 2023, 6:14 pm
image

Advertisement

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் கடந்துவந்த வலி நிறைந்த வரலாற்றை மாற்றியமைக்கும் பிரதான தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச பொதுசேவைகள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

இம் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“1948இல் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. பின்னர் ஏற்படுத்தப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பலர் நாடு கடத்தப்பட்டனர். பின்னர் மூன்று தசாப்த யுத்தத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அதனால் தான் எமது சொந்தங்களின் வாழ்வு வலிசுமந்த பயணம் என குறிப்பிடுகின்றேன்.

இலங்கை அரசாங்கமானது கடந்த காலங்களில் கொள்கை ரீதியிலான மாற்றங்களின்போது பன்முகத்தன்மை பற்றி சிந்திக்கவில்லை. 2022 இல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணமே.

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் பக்கம்நின்று தேவையான ஆலோசனைகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்தோம்.

பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டதுடன், தொழிலாளர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையிலுள்ள தொழில் துறைகளில் பெருந்தோட்ட தொழில்துறை முன்னோடியானதும், முதன்மையானதுமாகும்.

இலங்கையில் 15 இலட்சம் வரை மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெருந்தோட்ட தொழில்துறையில் தற்போது சுமார் ஒன்றரை இலட்சம் பேர் தொழில் புரிகின்றனர்.

அம்மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கட்சியாக, தொழிற்சங்கமாக எம்மால் முடிந்தவற்றை செய்துள்ளோம். தற்போது காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான புரட்சிகரமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.  

இலங்கையில், தொழில்துறைசார் சட்டங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவை உரிய வகையில் உள்வாங்கப்படவில்லை. திருத்தி அமைக்குமாறு கோரியுள்ளோம்.

இனம், மதம், மொழிக்கு அப்பால் மனிதத்தை விரும்பும் இளைஞர் குழுவாக செயற்பட்டால் நாட்டையும், உலகையும் மாற்றலாம். இதில் அனைத்து தொழில் துறைகளும் இணைய வேண்டும்” என தெரிவித்தார்.


மலையக மக்களின் வரலாற்று வலிகளை மாற்றியமைத்தது இ.தொ.காவே- ஜெனிவாவில் ஜீவன் உரை samugammedia இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் கடந்துவந்த வலி நிறைந்த வரலாற்றை மாற்றியமைக்கும் பிரதான தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச பொதுசேவைகள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இம் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,“1948இல் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. பின்னர் ஏற்படுத்தப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பலர் நாடு கடத்தப்பட்டனர். பின்னர் மூன்று தசாப்த யுத்தத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.அதனால் தான் எமது சொந்தங்களின் வாழ்வு வலிசுமந்த பயணம் என குறிப்பிடுகின்றேன்.இலங்கை அரசாங்கமானது கடந்த காலங்களில் கொள்கை ரீதியிலான மாற்றங்களின்போது பன்முகத்தன்மை பற்றி சிந்திக்கவில்லை. 2022 இல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணமே.நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் பக்கம்நின்று தேவையான ஆலோசனைகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்தோம்.பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டதுடன், தொழிலாளர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையிலுள்ள தொழில் துறைகளில் பெருந்தோட்ட தொழில்துறை முன்னோடியானதும், முதன்மையானதுமாகும்.இலங்கையில் 15 இலட்சம் வரை மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெருந்தோட்ட தொழில்துறையில் தற்போது சுமார் ஒன்றரை இலட்சம் பேர் தொழில் புரிகின்றனர்.அம்மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கட்சியாக, தொழிற்சங்கமாக எம்மால் முடிந்தவற்றை செய்துள்ளோம். தற்போது காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான புரட்சிகரமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.  இலங்கையில், தொழில்துறைசார் சட்டங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவை உரிய வகையில் உள்வாங்கப்படவில்லை. திருத்தி அமைக்குமாறு கோரியுள்ளோம்.இனம், மதம், மொழிக்கு அப்பால் மனிதத்தை விரும்பும் இளைஞர் குழுவாக செயற்பட்டால் நாட்டையும், உலகையும் மாற்றலாம். இதில் அனைத்து தொழில் துறைகளும் இணைய வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement