• Sep 20 2024

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள்! எடுக்கப்பட்ட நடவடிக்கை samugammedia

Chithra / Sep 4th 2023, 10:01 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கான இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி, இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பில் பாடசாலை மாணவர்களை முதற்கட்டமாகத் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தைப் நவீன ஊடகங்களின் ஊடாக ஒன்லைன் முறையில் முதற்கட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஒன்றியத்தில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்தை ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க ஒன்றியம் விரும்புவதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டினார். சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகள் மற்றும் குழுக்களுக்கு சிறந்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

சிறுவர்கள் மத்தியில் போதைப் பாவனை அதிகரித்துள்ளமை மற்றும் சிறுவர்களின் உரிமைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.


பாடசாலை மாணவர்கள் தமது அக்கறைகளை வெளிப்படுத்தக் கூடிய புகார் பெட்டிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம்

செலுத்தியிருப்பதாக ஒன்றியம் தெரிவித்தது. 1929 விசேட தொலைபேசி இலக்க சேவை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. சைபர் பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை samugammedia பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கான இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி, இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பில் பாடசாலை மாணவர்களை முதற்கட்டமாகத் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தைப் நவீன ஊடகங்களின் ஊடாக ஒன்லைன் முறையில் முதற்கட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஒன்றியத்தில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தத் திட்டத்தை ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க ஒன்றியம் விரும்புவதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டினார். சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகள் மற்றும் குழுக்களுக்கு சிறந்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.சிறுவர்கள் மத்தியில் போதைப் பாவனை அதிகரித்துள்ளமை மற்றும் சிறுவர்களின் உரிமைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.பாடசாலை மாணவர்கள் தமது அக்கறைகளை வெளிப்படுத்தக் கூடிய புகார் பெட்டிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாக ஒன்றியம் தெரிவித்தது. 1929 விசேட தொலைபேசி இலக்க சேவை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இலங்கை சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. சைபர் பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement