• Sep 19 2024

பழுதடைந்து போன காரைநகர் - ஊர்காவற்துறை கடற்பாதை ; மக்கள் அந்தரிப்பு!

Tamil nila / Feb 1st 2023, 5:50 pm
image

Advertisement

காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையில் கடற்பயணத்தில் ஈடுபட்ட கடற்பாதை பழுதடைந்ததனால் கடற்பயணத்தில் ஈடுபடும் பயணிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் கடற்பாதையினை இயக்குவதற்கான எரிபொருளை கொள்வனவு செய்வதிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வருமானம் இன்மையாக அறிய முடிகிறது.


காரைநகர், வட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்து ஊர்காவற்துறையில் நீதிமன்றம், வைத்தியசாலை, பிரதேச செயலகம் ஆகியவற்றில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் வேறு தேவைகளுக்கு பயணம் செய்வோர் குறித்த கடற்பாதையினை பயன்படுத்தி வந்தனர்.


இந்த கடற்பாதை பழுதடைந்ததால் கட்டணம் செலுத்தி படகு மூலம் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.


குறித்த கடற்பாதையானது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வந்தது. இருப்பினும் அவர்களிடம் நிதி வசதி இல்லாத காரணத்தால் அந்த பாதையை சீர்செய்ய முடியவில்லை.


இதனை சரி செய்வதற்காக காரைநகர் பிரதேச சபையில் "குறித்த கடற்பாதையை பிரதேச சபை பொறுப்பேற்று பராமரிப்பது" என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடற்பாதையினை பிரதேச சபையிடம் கையளிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மறுத்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


எனவே பிரதேச சபை அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒரு முடிவுக்கு வந்து இந்த கடற்பாதையை மீளவும் சேவையில் ஈடுபடுத்துமாறு மக்கள் வேண்டுகின்றனர்.

பழுதடைந்து போன காரைநகர் - ஊர்காவற்துறை கடற்பாதை ; மக்கள் அந்தரிப்பு காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையில் கடற்பயணத்தில் ஈடுபட்ட கடற்பாதை பழுதடைந்ததனால் கடற்பயணத்தில் ஈடுபடும் பயணிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் கடற்பாதையினை இயக்குவதற்கான எரிபொருளை கொள்வனவு செய்வதிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வருமானம் இன்மையாக அறிய முடிகிறது.காரைநகர், வட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்து ஊர்காவற்துறையில் நீதிமன்றம், வைத்தியசாலை, பிரதேச செயலகம் ஆகியவற்றில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் வேறு தேவைகளுக்கு பயணம் செய்வோர் குறித்த கடற்பாதையினை பயன்படுத்தி வந்தனர்.இந்த கடற்பாதை பழுதடைந்ததால் கட்டணம் செலுத்தி படகு மூலம் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.குறித்த கடற்பாதையானது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வந்தது. இருப்பினும் அவர்களிடம் நிதி வசதி இல்லாத காரணத்தால் அந்த பாதையை சீர்செய்ய முடியவில்லை.இதனை சரி செய்வதற்காக காரைநகர் பிரதேச சபையில் "குறித்த கடற்பாதையை பிரதேச சபை பொறுப்பேற்று பராமரிப்பது" என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடற்பாதையினை பிரதேச சபையிடம் கையளிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மறுத்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.எனவே பிரதேச சபை அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒரு முடிவுக்கு வந்து இந்த கடற்பாதையை மீளவும் சேவையில் ஈடுபடுத்துமாறு மக்கள் வேண்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement