எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ள தம்மிக்க பெரேராவிற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுன சார்பில் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான பிரச்சாரம் பல்வேறு தரப்பினராலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவர் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கிடைக்காது என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா. மொட்டுக்குள் வெடித்தது எதிர்ப்பு. samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ள தம்மிக்க பெரேராவிற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொதுஜன பெரமுன சார்பில் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான பிரச்சாரம் பல்வேறு தரப்பினராலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவர் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கிடைக்காது என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.