• Apr 05 2025

ஹெராயின் கடத்திய நபருக்கு மரண தண்டனை..!

Sharmi / Apr 3rd 2025, 3:35 pm
image

16 கிராம் மற்றும் 882 மில்லிகிராம் ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு குற்றவாளிக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சப்புவித இன்று மரண தண்டனை விதித்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை வழங்கினார். 

கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த 2019 பெப்ரவரி 17ஆம் திகதி 16.88 கிராம் ஹெராயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். 

அதன்படி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.



ஹெராயின் கடத்திய நபருக்கு மரண தண்டனை. 16 கிராம் மற்றும் 882 மில்லிகிராம் ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு குற்றவாளிக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சப்புவித இன்று மரண தண்டனை விதித்தார்.நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை வழங்கினார். கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த 2019 பெப்ரவரி 17ஆம் திகதி 16.88 கிராம் ஹெராயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். அதன்படி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement