• Mar 13 2025

மரண அச்சுறுத்தல், பாலியல் தொந்தரவு - இலங்கைப் பெண் அரசியல்வாதி நியூசிலாந்தில் தஞ்சம்

Thansita / Mar 12th 2025, 11:15 pm
image

மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக இலங்கை அரசியலில் ஈடுபட்ட பெண்  ஒருவர் நியுசிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் 

இலங்கையில் அரசியலில் ஈடுபட்ட-  32 வயது பெண் அரசியல்வாதியொருவருக்கு நியுசிலாந்து அடைக்கலமளித்துள்ளது.

அவருக்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நண்பர்களால் பாலியல் தொந்தரவு இருந்ததாக  தெரியவந்துள்ளது. 

அந்த பெண் தனது அரசியல்வாழ்க்கையை தொடர்வதற்காக அவருடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும், என தெரிவித்தனர், நண்பர் ஒருவர் இதனை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர் அவரை பழிவாங்க முயல்வதாக  தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட அரசியல்வாதி 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

குறித்த  பெண் அரசியல்வாதியின் உறவினர் விபத்தில் உயிரிழந்தை தொடர்ந்து அவரது  இறுதிச்சடங்கில் பிரேதப் பெட்டிக்கு அருகில் அடுத்ததாக அவர் கொல்லப்படுவார் என்ற குறிப்பு காணப்பட்டது.

இவ்வாறு  இரண்டு முறை மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன

2018 பொதுத்தேர்தலிற்கு முன்னர் அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என எச்சரித்ததாகவும் தனது வீட்டிற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும்  இலங்கையை சேர்ந்த அந்த பெண் குடிவரவு தீர்ப்பாயத்திடம் தெரிவித்தார்.

இலங்கையில் அரசியலில் ஈடுபடும் பெண்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன என தகவல்கள் கிடைப்பதாக நியுசிலாந்தின் தீர்ப்பாயம் தெரிவித்தது.

'உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் தான் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என அந்த பெண் தெரிவித்தார்' அரசியலில் ஈடுபட நினைத்ததே எனது வாழ்க்கையின் மிக மோசமான தீர்மானம் எனவும்  நான் என்னை இழந்துதோல்வியடைந்த விட்டதாக  உணர்கின்றேன்' என தெரிவித்தார்.

இலங்கைக்கு தான் திரும்பிச்சென்றால் அந்த அரசியல்வாதி தன்னை கொலை செய்வார் தனது அரசியல்வாழ்க்கையை அழித்தமைக்காக பழிவாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்

2022 இல் தனது பெற்றோரின் வீடு தீக்கிரையானது எனவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பெண் அரசியல் வாதியின் நண்பர் -' எதிர்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும்இநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரை பாலியல் உறவிற்கு இணங்க செய்ய முயற்சி செய்ததாலும் அவரால் அரசியலில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போனது என தெரிpத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

மரண அச்சுறுத்தல், பாலியல் தொந்தரவு - இலங்கைப் பெண் அரசியல்வாதி நியூசிலாந்தில் தஞ்சம் மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக இலங்கை அரசியலில் ஈடுபட்ட பெண்  ஒருவர் நியுசிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இலங்கையில் அரசியலில் ஈடுபட்ட-  32 வயது பெண் அரசியல்வாதியொருவருக்கு நியுசிலாந்து அடைக்கலமளித்துள்ளது.அவருக்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நண்பர்களால் பாலியல் தொந்தரவு இருந்ததாக  தெரியவந்துள்ளது. அந்த பெண் தனது அரசியல்வாழ்க்கையை தொடர்வதற்காக அவருடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும், என தெரிவித்தனர், நண்பர் ஒருவர் இதனை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர் அவரை பழிவாங்க முயல்வதாக  தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.குறிப்பிட்ட அரசியல்வாதி 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.குறித்த  பெண் அரசியல்வாதியின் உறவினர் விபத்தில் உயிரிழந்தை தொடர்ந்து அவரது  இறுதிச்சடங்கில் பிரேதப் பெட்டிக்கு அருகில் அடுத்ததாக அவர் கொல்லப்படுவார் என்ற குறிப்பு காணப்பட்டது.இவ்வாறு  இரண்டு முறை மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன2018 பொதுத்தேர்தலிற்கு முன்னர் அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என எச்சரித்ததாகவும் தனது வீட்டிற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும்  இலங்கையை சேர்ந்த அந்த பெண் குடிவரவு தீர்ப்பாயத்திடம் தெரிவித்தார்.இலங்கையில் அரசியலில் ஈடுபடும் பெண்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன என தகவல்கள் கிடைப்பதாக நியுசிலாந்தின் தீர்ப்பாயம் தெரிவித்தது.'உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் தான் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என அந்த பெண் தெரிவித்தார்' அரசியலில் ஈடுபட நினைத்ததே எனது வாழ்க்கையின் மிக மோசமான தீர்மானம் எனவும்  நான் என்னை இழந்துதோல்வியடைந்த விட்டதாக  உணர்கின்றேன்' என தெரிவித்தார்.இலங்கைக்கு தான் திரும்பிச்சென்றால் அந்த அரசியல்வாதி தன்னை கொலை செய்வார் தனது அரசியல்வாழ்க்கையை அழித்தமைக்காக பழிவாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்2022 இல் தனது பெற்றோரின் வீடு தீக்கிரையானது எனவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறித்த பெண் அரசியல் வாதியின் நண்பர் -' எதிர்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும்இநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரை பாலியல் உறவிற்கு இணங்க செய்ய முயற்சி செய்ததாலும் அவரால் அரசியலில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போனது என தெரிpத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement