• Aug 14 2025

நாளுக்கு நாள் தொடரும் உயிரிழப்புகள்; கண்டி - மகாவலி ஆற்றில் உருக்குலைந்த சடலம் மீட்பு!

shanuja / Aug 14th 2025, 10:49 am
image

கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.


சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உயிரிழந்த நபர், நீல நிற  ரீசேட் மற்றும் நீல நிற  காற்சட்டை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 


உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அத்துடன் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


அண்மைக்காலமான நாளுக்கு ஒரு சடலம் என தொடர்ச்சியாக சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் தொடரும் உயிரிழப்புகள்; கண்டி - மகாவலி ஆற்றில் உருக்குலைந்த சடலம் மீட்பு கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர், நீல நிற  ரீசேட் மற்றும் நீல நிற  காற்சட்டை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அண்மைக்காலமான நாளுக்கு ஒரு சடலம் என தொடர்ச்சியாக சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement