• May 21 2025

பொலிஸ் காவலில் ஏற்படும் மரணங்கள்; வழிகாட்டல்களை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம்!

Chithra / May 20th 2025, 8:25 am
image


பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில், பொலிஸ் காவலில் ஏற்பட்ட 49 மரணங்களும், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 30 மரணங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை வெளியிட்டதாக, ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான எல்.டி.பி. தெஹிதெனிய தெரிவித்தார். 

இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்துவதற்கு பொலிஸார் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

பொலிஸ் காவலில் ஏற்படும் மரணங்கள்; வழிகாட்டல்களை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம் பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில், பொலிஸ் காவலில் ஏற்பட்ட 49 மரணங்களும், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 30 மரணங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை வெளியிட்டதாக, ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான எல்.டி.பி. தெஹிதெனிய தெரிவித்தார். இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்துவதற்கு பொலிஸார் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement