• Jan 16 2025

மஹிந்த சமரசிங்கவின் தூதுவர் பதவி தொடர்பான தீர்மானம்

Chithra / Jan 3rd 2025, 12:55 pm
image

 

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, குறித்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் நியமனங்களைப் பெற்ற 16 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், அவர்களில் சிலர் வெளிநாட்டு தூதரகங்களில் செயலூக்கமான சேவையை மேற்கொள்ளும் நோக்கில் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மஹிந்த சமரசிங்கவை தொடர்ந்தும் குறித்த பதவியில் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மஹிந்த சமரசிங்கவின் தூதுவர் பதவி தொடர்பான தீர்மானம்  சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, குறித்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் நியமனங்களைப் பெற்ற 16 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எனினும், அவர்களில் சிலர் வெளிநாட்டு தூதரகங்களில் செயலூக்கமான சேவையை மேற்கொள்ளும் நோக்கில் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை, மஹிந்த சமரசிங்கவை தொடர்ந்தும் குறித்த பதவியில் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement