• Jan 02 2025

இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச திட்டங்கள் மீள ஆரம்பம் - அமைச்சர் நலிந்த பெருமிதம்

Chithra / Dec 30th 2024, 1:23 pm
image


இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வளமான ஆரம்பம் ஒன்றை அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இலங்கை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளதுடன், இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

குறுகிய காலத்தில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயற்படத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார். 

அரசாங்கம் பதவியேற்று 03 மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்


 

இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச திட்டங்கள் மீள ஆரம்பம் - அமைச்சர் நலிந்த பெருமிதம் இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வளமான ஆரம்பம் ஒன்றை அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இலங்கை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளதுடன், இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.குறுகிய காலத்தில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயற்படத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் பதவியேற்று 03 மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் 

Advertisement

Advertisement

Advertisement