ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் சிலவும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.
கோட்பாட்டு ரீதியாக இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் இவரது வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தும் இருந்தது.
அவர் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைத் திரட்டியிருந்தார்.
இது தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் கிடைத்த வெற்றியாகவே நோக்கப்பட்டது.
ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் தேசமாகத் திரட்டப்பட்ட மக்கள் புதிய வழிகாட்டுதல் இல்லாததால் பிரிந்து நின்று தங்கள் விருப்பத்துக்கு வாக்களித்தார்கள்.
இந்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவாக கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் செலவழித்த கணக்கு விபரங்கள் தொடர்பான வழக்கும் மாத்திரமே எஞ்சியுள்ளன என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று (29) ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதற்குத் தலைமை வகித்து அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் அரசியலை நெறிப்படுத்த சிவில் அமைப்புகள் எனப்படும் குடிசார் அமைப்புகளின் வகிபாகம் இன்றியமையாததாக உணரப்பட்டது.
இதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்று வெற்றிகரமாக எழுக தமிழ் பேரணிகளை நடாத்திக் காட்டியிருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்காகக் குறைந்தபட்டசத் தீர்வுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்திருந்தது.
தமிழ் மக்கள் பேரவையின் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள்.
ஆனால், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் தனியான ஒரு கட்சியை ஆரம்பித்ததுடன் அது குறை ஆயுளுடன் முடிவுக்கு வந்தது.
குடிசார் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபை மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
இதனால்தான் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் திரளாக வாக்களித்திருந்தார்கள்.
ஆனால், அந்த நம்பிக்கையும் இப்போது பொய்த்துப்போய்விட்டது.
உரிய வழிவரைபடம் அதனிடம் இல்லாத காரணத்தால் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் வந்த பாராளுமன்றத் தேர்தலை அது எதிர்கொள்ளமுடியாமல் பின்வாங்கியது.
தமிழ்த்தேசிய உணர்வுடன் தன் பின்னால் திரண்ட மக்களுக்கு அது வழிகாட்டத் தவறியது.
இதுவும் வடக்குக் கிழக்கில் ஜே.வி.பி இன் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.
மக்கள் சிவில் சமூக அமைப்புகளை நம்பமுடியாத ஒரு சூழ்நிலையை சிவில் அமைப்புகளே இன்று உருவாக்கி விட்டன.
அரசியலில் சிவில் அமைப்புகள் தங்களின் வகிபாகம் குறித்து மீள் பரிசீலனை செய்தாலொழிய அவற்றால் இன்னொரு கட்டத்துக்கு நகர முடியாது.
சிவில் அமைப்புகள் சில கட்சிகளின் பினாமிகளாகவே உள்ளன.
சிவில் அமைப்புகளின் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தைப் பயன்படுத்தி சிலர் தேர்தலில் குதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
கட்சி அரசியலை முன்னிறுத்தாத, தமிழ்த்தேசிய அரசியலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு மக்கள் இயக்கமாக சிவில் சமூகங்கள் மாற்றம் பெற்றாலொழிய தமிழ்த்தேசிய அரசியலை வருங்காலங்களில் அவற்றால் நெறிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
சிவில் அமைப்புகள் சில கட்சிகளின் பினாமிகளாகவே உள்ளன - பொ. ஐங்கரநேசன் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் சிலவும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது. கோட்பாட்டு ரீதியாக இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் இவரது வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தும் இருந்தது. அவர் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைத் திரட்டியிருந்தார்.இது தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் கிடைத்த வெற்றியாகவே நோக்கப்பட்டது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் தேசமாகத் திரட்டப்பட்ட மக்கள் புதிய வழிகாட்டுதல் இல்லாததால் பிரிந்து நின்று தங்கள் விருப்பத்துக்கு வாக்களித்தார்கள்.இந்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவாக கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் செலவழித்த கணக்கு விபரங்கள் தொடர்பான வழக்கும் மாத்திரமே எஞ்சியுள்ளன என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று (29) ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இதற்குத் தலைமை வகித்து அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் அரசியலை நெறிப்படுத்த சிவில் அமைப்புகள் எனப்படும் குடிசார் அமைப்புகளின் வகிபாகம் இன்றியமையாததாக உணரப்பட்டது. இதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்று வெற்றிகரமாக எழுக தமிழ் பேரணிகளை நடாத்திக் காட்டியிருந்தது.தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்காகக் குறைந்தபட்டசத் தீர்வுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்திருந்தது. தமிழ் மக்கள் பேரவையின் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் தனியான ஒரு கட்சியை ஆரம்பித்ததுடன் அது குறை ஆயுளுடன் முடிவுக்கு வந்தது.குடிசார் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபை மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதனால்தான் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் திரளாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கையும் இப்போது பொய்த்துப்போய்விட்டது. உரிய வழிவரைபடம் அதனிடம் இல்லாத காரணத்தால் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் வந்த பாராளுமன்றத் தேர்தலை அது எதிர்கொள்ளமுடியாமல் பின்வாங்கியது.தமிழ்த்தேசிய உணர்வுடன் தன் பின்னால் திரண்ட மக்களுக்கு அது வழிகாட்டத் தவறியது. இதுவும் வடக்குக் கிழக்கில் ஜே.வி.பி இன் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. மக்கள் சிவில் சமூக அமைப்புகளை நம்பமுடியாத ஒரு சூழ்நிலையை சிவில் அமைப்புகளே இன்று உருவாக்கி விட்டன. அரசியலில் சிவில் அமைப்புகள் தங்களின் வகிபாகம் குறித்து மீள் பரிசீலனை செய்தாலொழிய அவற்றால் இன்னொரு கட்டத்துக்கு நகர முடியாது. சிவில் அமைப்புகள் சில கட்சிகளின் பினாமிகளாகவே உள்ளன.சிவில் அமைப்புகளின் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தைப் பயன்படுத்தி சிலர் தேர்தலில் குதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கட்சி அரசியலை முன்னிறுத்தாத, தமிழ்த்தேசிய அரசியலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு மக்கள் இயக்கமாக சிவில் சமூகங்கள் மாற்றம் பெற்றாலொழிய தமிழ்த்தேசிய அரசியலை வருங்காலங்களில் அவற்றால் நெறிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.