தெஹிவளையில் இரண்டு மாடி கட்டடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு எடுக்க போலி பத்திரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடி புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றுக்கு இதனை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில், குற்றவியல் குற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் முழு விசாரணையை மேற்கொண்டு, சந்தேகநபர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தெஹிவளை இரண்டு மாடி கட்டட குத்தகை மோசடி: அமைச்சரிடம் வாக்குமூலம் தெஹிவளையில் இரண்டு மாடி கட்டடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு எடுக்க போலி பத்திரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.மோசடி புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றுக்கு இதனை தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தில், குற்றவியல் குற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுஇருப்பினும் முழு விசாரணையை மேற்கொண்டு, சந்தேகநபர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.