• Nov 23 2024

பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!! பொதுமக்கள் அந்தரிப்பு..!!

Tamil nila / Feb 9th 2024, 6:56 pm
image

வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் அந்தரிப்பிற்குள்ளாகினர்.

வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு இறப்பு திருமணச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக  இன்றையதினம் பொதுமக்கள் சென்றிருந்தனர்.


இந்நிலையில் காலை 9 மணிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் மாலை 3 மணிவரை பொதுமக்கள் காக்க வைக்கப்பட்ட போதிலும் பலருக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகினர். 


அவசரத் தேவை நிமித்தம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தோம் எனினும் ஒருநாள் முழுவதும் நின்று கூட அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த அலுவலகத்தில் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதால் தொடர்ச்சியாக இந்தநிலமை ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் தேவைக்கேற்ற ஊழியர்களை நியமித்து வினைத்திறனான புதிய முறைமை ஒன்றை உருவாக்கி அதனை சீர்செய்ய முடியும் என பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.


பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் பொதுமக்கள் அந்தரிப்பு. வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் அந்தரிப்பிற்குள்ளாகினர்.வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு இறப்பு திருமணச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக  இன்றையதினம் பொதுமக்கள் சென்றிருந்தனர்.இந்நிலையில் காலை 9 மணிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் மாலை 3 மணிவரை பொதுமக்கள் காக்க வைக்கப்பட்ட போதிலும் பலருக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகினர். அவசரத் தேவை நிமித்தம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தோம் எனினும் ஒருநாள் முழுவதும் நின்று கூட அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.இதேவேளை குறித்த அலுவலகத்தில் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதால் தொடர்ச்சியாக இந்தநிலமை ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தேவைக்கேற்ற ஊழியர்களை நியமித்து வினைத்திறனான புதிய முறைமை ஒன்றை உருவாக்கி அதனை சீர்செய்ய முடியும் என பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement