• Nov 23 2024

சாப்பாடு வழங்க தாமதம்..! ஆத்திரமடைந்த யாசகர் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி மீது சரமாரியாக தாக்குதல்

Chithra / Jan 17th 2024, 8:06 am
image

 

சாப்பாடு வழங்க தாமதமாகியதால் யாசகம் பெறும் ஒருவர் கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை அவரின் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு போக்குவரத்து காவல்துறைக்கு அருகில் ஹோட்டல் நடத்தி வரும் ஹோட்டல் உரிமையாளர், 

குறித்த யாசகனுக்கு கடந்த 13 வருடங்களாக தினமும் சாப்பாடும் பானமும் கொடுத்து வந்திருக்கின்றார்.

சம்பவதினமன்று சாப்பாடு தாமதமாகியதால் ஆத்திரமடைந்த யாசகர், 

கடை உரிமையாளரின் மனைவியின்  தலையில் சரமாரியாக தாக்கி, கண்ணுக்கு மேல் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்

குறித்த யாசகர் மஹியங்கனைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரியவருகின்றது. 


சாப்பாடு வழங்க தாமதம். ஆத்திரமடைந்த யாசகர் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி மீது சரமாரியாக தாக்குதல்  சாப்பாடு வழங்க தாமதமாகியதால் யாசகம் பெறும் ஒருவர் கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை அவரின் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,கொழும்பு போக்குவரத்து காவல்துறைக்கு அருகில் ஹோட்டல் நடத்தி வரும் ஹோட்டல் உரிமையாளர், குறித்த யாசகனுக்கு கடந்த 13 வருடங்களாக தினமும் சாப்பாடும் பானமும் கொடுத்து வந்திருக்கின்றார்.சம்பவதினமன்று சாப்பாடு தாமதமாகியதால் ஆத்திரமடைந்த யாசகர், கடை உரிமையாளரின் மனைவியின்  தலையில் சரமாரியாக தாக்கி, கண்ணுக்கு மேல் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்குறித்த யாசகர் மஹியங்கனைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement