• Sep 19 2024

புதிய முதலீட்டார்களுக்கு தடையாக இருக்கும் நிபந்தனையை நீக்குமாறு கோரிக்கை!

Tamil nila / Dec 27th 2022, 8:27 pm
image

Advertisement

புதிய முதலீட்டார்களுக்கு தடையாக இருக்கும் நிபந்தனையை நீக்குமாறு சங்கவி திரைப்பட நிறுவனத்தின் தலைவர் துரைராசா சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இவர் இந்த கோரிக்கையை இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவரை நேரில் சந்தித்து விடுத்துள்ளதுடன், இவர் இது சம்பந்தமாக எழுத்துமூலம் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் தனது கோரிக்கை முன்வைத்துள்ளார்.


உலகத்தில் சினிமாத் துறையானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்ற வேளையிலும் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்துறையை விட்டு வேறு துறையை நாடி சென்று கொண்டிருக்கின்ற நிலையிலும் அநேகமான தியேட்டர்கள் இழுத்து மூடிக் கொண்டு வரும் நிலையிலும் கலையின் மீதும் சினிமாத்துறையின் மீதும் கொண்ட தீவிர நாட்டத்தால் நான் இத்துறைக்குள் பிரவேசித்துள்ளேன். இந்நிலையில் இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் வௌிநாட்டு திரைப்பட நிறுவனங்களுக்கான வழங்குநர்களைப் பதிவு செய்தல் தொடர்பாக விதித்துள்ள  பத்திரிகை விளம்பரத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்குரிய விண்ணப்பப்படிவங்களையும் விபரங்களையும் மீளளிக்கப்படாத ஐம்பதாயிரம் ரூபாவை செலுத்தித் தான்  பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதியவர்களுக்கு இத்துறைக்குள் பிரவேசி்க்கத் தடையாக இருக்கும் இந்த நிபந்தனையை நீக்கி அரசாங்கம் கோருவது போல் புதிய முதலீட்டாளர்கள் வருவதற்கு வழியமைத்து கொடுக்குமாறு இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய முதலீட்டார்களுக்கு தடையாக இருக்கும் நிபந்தனையை நீக்குமாறு கோரிக்கை புதிய முதலீட்டார்களுக்கு தடையாக இருக்கும் நிபந்தனையை நீக்குமாறு சங்கவி திரைப்பட நிறுவனத்தின் தலைவர் துரைராசா சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.இவர் இந்த கோரிக்கையை இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவரை நேரில் சந்தித்து விடுத்துள்ளதுடன், இவர் இது சம்பந்தமாக எழுத்துமூலம் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் தனது கோரிக்கை முன்வைத்துள்ளார்.உலகத்தில் சினிமாத் துறையானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்ற வேளையிலும் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்துறையை விட்டு வேறு துறையை நாடி சென்று கொண்டிருக்கின்ற நிலையிலும் அநேகமான தியேட்டர்கள் இழுத்து மூடிக் கொண்டு வரும் நிலையிலும் கலையின் மீதும் சினிமாத்துறையின் மீதும் கொண்ட தீவிர நாட்டத்தால் நான் இத்துறைக்குள் பிரவேசித்துள்ளேன். இந்நிலையில் இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் வௌிநாட்டு திரைப்பட நிறுவனங்களுக்கான வழங்குநர்களைப் பதிவு செய்தல் தொடர்பாக விதித்துள்ள  பத்திரிகை விளம்பரத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்குரிய விண்ணப்பப்படிவங்களையும் விபரங்களையும் மீளளிக்கப்படாத ஐம்பதாயிரம் ரூபாவை செலுத்தித் தான்  பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதியவர்களுக்கு இத்துறைக்குள் பிரவேசி்க்கத் தடையாக இருக்கும் இந்த நிபந்தனையை நீக்கி அரசாங்கம் கோருவது போல் புதிய முதலீட்டாளர்கள் வருவதற்கு வழியமைத்து கொடுக்குமாறு இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement