ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை இன்றைய தினம்(30) சாவகச்சேரி நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான பா.கஜதீபன் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேசபை உபதவிசாளர் செ.மயூரன் உள்ளிட்டவர்கள் இந்த பரப்புரையில் கலந்து கொண்டார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன்,
வடக்கு கிழக்கு எங்கும் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு பாரிய அளவான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும்.
எனவே, அனைத்து மக்களும் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையின் பால் நிற்கின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை சாவகச்சேரியில் முன்னெடுப்பு. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை இன்றைய தினம்(30) சாவகச்சேரி நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான பா.கஜதீபன் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேசபை உபதவிசாளர் செ.மயூரன் உள்ளிட்டவர்கள் இந்த பரப்புரையில் கலந்து கொண்டார்கள்.இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன், வடக்கு கிழக்கு எங்கும் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு பாரிய அளவான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும். எனவே, அனைத்து மக்களும் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையின் பால் நிற்கின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.