• Nov 23 2024

மறைமுகமாக சிங்களத்தரப்புக்கு வாக்களிக்கவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது- கஜேந்திரகுமார் தெரிவிப்பு..!samugammedia

Tharun / Feb 20th 2024, 7:46 pm
image

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வரக்ககூடியவர்கள் யாரிடத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதனால் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்காளிக்கும் மனோநிலையில் தமிழ் மக்கள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொது வேட்பாளர் ஒருவரை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் களம் நிறுத்தலாம் என்ற கருத்து தொடர்பான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இந்த பொது வேட்பாளர் என்ற கருத்துடன் உடன்படவில்லை. தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வரக்ககூடியவர்கள் யாரிடத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதனால் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்காளிக்கும் மனோநிலையில் தமிழ் மக்கள் இல்லை. இவர்கள் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பதை கையில் எடுப்பதே தமிழ் மக்களை வாக்குச் சாவடியை நோக்கி வரவைப்பதற்குத்தான். தமிழ் மக்களின் வாக்குகள் இந்த சிங்கள தரப்புகளுக்கு போகக் கூடாது என்பது தான் தமிழ் மக்களினிடத்தில் மேலோங்கி நிற்கும் பார்வை. இப்படியான தமிழ் மக்களின் அதிருப்தியை வெளிக்காட்டுகின்ற வகையிலான தந்திரோபாய நகர்வு ரீதியில்  கையாளாமல் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொது வேட்பாளரை நிறத்துவது என்றும் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் விரும்பினால் இரண்டாவது வாக்கினை தமக்கு  பிடித்த வேட்பளருக்கு வழங்கலாம் என்று கூறுகின்றனர்.

இது நேரடியாக சிங்களத்தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறுவதற்கு சமம். இவர்களுடைய நோக்கமே இப்படி ஒரு பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கூடாக தமிழ் மக்களை வாக்குச் சாவடிகளுக்கு வர வைப்பது தான். இவர்கள் எவரும் பேரம் பேசும் சக்திகளாக ஒரு போதும் இருக்கப் போவது இல்லை. விக்னேஸ்வரன் கூறிவிட்டார் இந்த சூழ்நிலைக்கு பொருத்தமானவர் ரணில் தான் என்று ஆகவே அவரின் தெரிவு ரணில். தமிழரசுக்கட்சி தாங்கள் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் தமிழ் மக்களுடன் சாதகமான ரீதியில் பயணிக்கக் கூடிய ஒருவரைதான் தெரிவு செய்வோம் என்று கூறிவிட்டது. எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் வாக்குகளின் பெறுமதியினை வெல்கின்ற தரப்பிற்கும் தோற்கின்ற தரப்பிற்கும் மற்றும் உலகிற்கும் காட்டவேண்டும்  என்று மேலும் குறிப்பிட்டார்.

மறைமுகமாக சிங்களத்தரப்புக்கு வாக்களிக்கவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது- கஜேந்திரகுமார் தெரிவிப்பு.samugammedia தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வரக்ககூடியவர்கள் யாரிடத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதனால் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்காளிக்கும் மனோநிலையில் தமிழ் மக்கள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொது வேட்பாளர் ஒருவரை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் களம் நிறுத்தலாம் என்ற கருத்து தொடர்பான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நான் இந்த பொது வேட்பாளர் என்ற கருத்துடன் உடன்படவில்லை. தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வரக்ககூடியவர்கள் யாரிடத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதனால் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்காளிக்கும் மனோநிலையில் தமிழ் மக்கள் இல்லை. இவர்கள் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பதை கையில் எடுப்பதே தமிழ் மக்களை வாக்குச் சாவடியை நோக்கி வரவைப்பதற்குத்தான். தமிழ் மக்களின் வாக்குகள் இந்த சிங்கள தரப்புகளுக்கு போகக் கூடாது என்பது தான் தமிழ் மக்களினிடத்தில் மேலோங்கி நிற்கும் பார்வை. இப்படியான தமிழ் மக்களின் அதிருப்தியை வெளிக்காட்டுகின்ற வகையிலான தந்திரோபாய நகர்வு ரீதியில்  கையாளாமல் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொது வேட்பாளரை நிறத்துவது என்றும் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் விரும்பினால் இரண்டாவது வாக்கினை தமக்கு  பிடித்த வேட்பளருக்கு வழங்கலாம் என்று கூறுகின்றனர். இது நேரடியாக சிங்களத்தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறுவதற்கு சமம். இவர்களுடைய நோக்கமே இப்படி ஒரு பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கூடாக தமிழ் மக்களை வாக்குச் சாவடிகளுக்கு வர வைப்பது தான். இவர்கள் எவரும் பேரம் பேசும் சக்திகளாக ஒரு போதும் இருக்கப் போவது இல்லை. விக்னேஸ்வரன் கூறிவிட்டார் இந்த சூழ்நிலைக்கு பொருத்தமானவர் ரணில் தான் என்று ஆகவே அவரின் தெரிவு ரணில். தமிழரசுக்கட்சி தாங்கள் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் தமிழ் மக்களுடன் சாதகமான ரீதியில் பயணிக்கக் கூடிய ஒருவரைதான் தெரிவு செய்வோம் என்று கூறிவிட்டது. எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் வாக்குகளின் பெறுமதியினை வெல்கின்ற தரப்பிற்கும் தோற்கின்ற தரப்பிற்கும் மற்றும் உலகிற்கும் காட்டவேண்டும்  என்று மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement