• Nov 23 2024

ஜனநாயக ஐக்கிய முன்னணியினர் உதயராசாவுக்கு ஆதரவு..!

Sharmi / Nov 2nd 2024, 2:04 pm
image

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த ஜனநாயக ஐக்கிய முன்னணியானது ப.உதயராசாவை முதன்மை வேட்பாளராக கொண்ட ஜனநாயக தேசிய கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் முக்கியஸ்தரான   ஜாவித் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தோம்.

அந்தவகையில் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்ற காரணத்திற்காக வெல்லக் கூடிய வேட்பாளர் ஒருவருக்கு எமது ஆதரவினை தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அந்தவகையில் ப.உதயராசாவை  முதன்மை வேட்பாளராக கொண்ட ஜனநாயக தேசிய கூட்டணிக்கு  எமது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளோம். 

ஜனநாயக தேசிய கூட்டணியின் வெற்றிக்காக நாம் எமது பகுதிகளில் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை முன்னெடுப்போம்.

அத்துடன் எமது ஆதரவாளர்கள் அனைவரும் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசியகூட்டணிக்கும் அதன் வேட்பாளரான ப.உதயராசாவுக்கும் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

ஜனநாயக ஐக்கிய முன்னணியினர் உதயராசாவுக்கு ஆதரவு. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த ஜனநாயக ஐக்கிய முன்னணியானது ப.உதயராசாவை முதன்மை வேட்பாளராக கொண்ட ஜனநாயக தேசிய கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த கட்சியின் முக்கியஸ்தரான   ஜாவித் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தோம். அந்தவகையில் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்ற காரணத்திற்காக வெல்லக் கூடிய வேட்பாளர் ஒருவருக்கு எமது ஆதரவினை தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.அந்தவகையில் ப.உதயராசாவை  முதன்மை வேட்பாளராக கொண்ட ஜனநாயக தேசிய கூட்டணிக்கு  எமது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளோம். ஜனநாயக தேசிய கூட்டணியின் வெற்றிக்காக நாம் எமது பகுதிகளில் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை முன்னெடுப்போம். அத்துடன் எமது ஆதரவாளர்கள் அனைவரும் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசியகூட்டணிக்கும் அதன் வேட்பாளரான ப.உதயராசாவுக்கும் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement