• May 20 2024

நில உரிமை கேட்டு ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்..!samugammedia

Sharmi / Jun 21st 2023, 12:36 pm
image

Advertisement

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஊடாக ஹட்டனில் சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு நிலமற்றோருக்கு நிலம் என்ற தலைப்பின் கீழ் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் உரிமையை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய பாரிய அளவிலான ஆர்ப்பாட்ட ஊர்வலமானது மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவர் தங்கவேலு கணேசலிங்கம் தலைமையின் கீழ் இன்று (21) இடம்பெற்றது. 

இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலமானது ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்கள் பேரணியும்,வாகன பேரணியுமாக ஆரம்பிக்கப்பட்டு ஹட்டன் கிருஸ்ணபகவான் கலாச்சார மண்டபத்தில் நிறைவு பெற்றது.

குறித்த நிகழ்வில் மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாகவும் தற்போது நிலமற்று காணப்படுகின்ற சமூகம் எவ்வாறான அவலங்களை சந்திக்கின்றது எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.




குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவர் தங்கவேலு கணேசலிங்கம்,

மலையக மக்கள் 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தில் அதிக கரிசணை கொண்டு செயற்படுகின்றனர்.

எனவே இந்த 2023 ஆம் ஆண்டு மலையக மக்கள் சாதித்த பல விடயங்களை வெளிக்கொண்டு வரவும் இந்த மக்களின் உரிமைகளை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுத்து வருகின்றோம்.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் என்ற வகையில் நாம் அவர்களின் காணிகளை உறுதிப்படுத்த பல செயற்பாடுகளை செய்து வருகின்றோம்.

எனவே மலையக மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவே இந்த பாதயாத்திரை நிகழ்வும் இடம்பெற்றது எனவும் தெரிவித்தார்.

நில உரிமை கேட்டு ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்.samugammedia மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஊடாக ஹட்டனில் சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு நிலமற்றோருக்கு நிலம் என்ற தலைப்பின் கீழ் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் உரிமையை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய பாரிய அளவிலான ஆர்ப்பாட்ட ஊர்வலமானது மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவர் தங்கவேலு கணேசலிங்கம் தலைமையின் கீழ் இன்று (21) இடம்பெற்றது.  இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலமானது ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்கள் பேரணியும்,வாகன பேரணியுமாக ஆரம்பிக்கப்பட்டு ஹட்டன் கிருஸ்ணபகவான் கலாச்சார மண்டபத்தில் நிறைவு பெற்றது. குறித்த நிகழ்வில் மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.குறித்த நிகழ்வில் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாகவும் தற்போது நிலமற்று காணப்படுகின்ற சமூகம் எவ்வாறான அவலங்களை சந்திக்கின்றது எனவும் தெளிவுபடுத்தப்பட்டது. குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவர் தங்கவேலு கணேசலிங்கம், மலையக மக்கள் 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தில் அதிக கரிசணை கொண்டு செயற்படுகின்றனர்.எனவே இந்த 2023 ஆம் ஆண்டு மலையக மக்கள் சாதித்த பல விடயங்களை வெளிக்கொண்டு வரவும் இந்த மக்களின் உரிமைகளை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுத்து வருகின்றோம்.மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் என்ற வகையில் நாம் அவர்களின் காணிகளை உறுதிப்படுத்த பல செயற்பாடுகளை செய்து வருகின்றோம்.எனவே மலையக மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவே இந்த பாதயாத்திரை நிகழ்வும் இடம்பெற்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement