• May 04 2024

இலங்கையில் அதிகரித்த டெங்கு மரணங்கள்..! ஆபத்தான வலயங்கள் தொடர்பில் எச்சரிக்கை

Chithra / Apr 22nd 2024, 12:53 pm
image

Advertisement


நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 21 ஆயிரத்து 453 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு டெங்கு நுளம்பு பரவும் ஆபத்தான வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையில் அதிகரித்த டெங்கு மரணங்கள். ஆபத்தான வலயங்கள் தொடர்பில் எச்சரிக்கை நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் இதுவரை 21 ஆயிரத்து 453 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு டெங்கு நுளம்பு பரவும் ஆபத்தான வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement