மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள தோப்பூர் பிரதேசத்தில் இன்று டெங்கு பரிசோதனையும், சிரமதானமும் முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் சுகாதாரப் பணிமனை, மூதூர் பிரதேச சபையோடு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அத்தோடு தோப்பூர் உப அலுவலக ஊழியர்களினால் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.
இவ் விசேட வேலைதிட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், போலீசார், டெங்கு ஒழிப்பு ஊழியர்கள், மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மூதூரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள தோப்பூர் பிரதேசத்தில் இன்று டெங்கு பரிசோதனையும், சிரமதானமும் முன்னெடுக்கப்பட்டது.மூதூர் சுகாதாரப் பணிமனை, மூதூர் பிரதேச சபையோடு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.அத்தோடு தோப்பூர் உப அலுவலக ஊழியர்களினால் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.இவ் விசேட வேலைதிட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், போலீசார், டெங்கு ஒழிப்பு ஊழியர்கள், மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.