• May 19 2024

வங்காள விரிகுடாவில் மீண்டும் காற்றழுத்தம் : வாட்டப்போகும் குளிர்- மக்களே எச்சரிக்கை!

Tamil nila / Dec 14th 2022, 9:31 pm
image

Advertisement

வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் (இந்தோனேசியாவின் மேற்கு கரையோரமாக) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


காலநிலை மாற்றம் தொடர்பில் மேலும் எதிர்வுகூறலை வெளியிட்டுள்ள அவர்,


“இது அடுத்து வரும் சில தினங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது( இந்த அனுமானம் தாழ்வு நிலையின் தற்போதைய நிலையினைப் பொறுத்தது. தாழ்வு நிலை வலுப்பெற்ற பின்னர் நகர்வு திசையும் கரையைக் கடக்கும் இடமும் மாறுபடலாம்).



இதனால் எதிர்வரும் 17.12.2022 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.



அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் குளிரான வானிலையும் மீண்டும் ஆரம்பிக்கும்.


தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக கிடைக்கும் மிதமான மழை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக” கூறியுள்ளார்.   


வங்காள விரிகுடாவில் மீண்டும் காற்றழுத்தம் : வாட்டப்போகும் குளிர்- மக்களே எச்சரிக்கை வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் (இந்தோனேசியாவின் மேற்கு கரையோரமாக) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் தொடர்பில் மேலும் எதிர்வுகூறலை வெளியிட்டுள்ள அவர்,“இது அடுத்து வரும் சில தினங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது( இந்த அனுமானம் தாழ்வு நிலையின் தற்போதைய நிலையினைப் பொறுத்தது. தாழ்வு நிலை வலுப்பெற்ற பின்னர் நகர்வு திசையும் கரையைக் கடக்கும் இடமும் மாறுபடலாம்).இதனால் எதிர்வரும் 17.12.2022 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் குளிரான வானிலையும் மீண்டும் ஆரம்பிக்கும்.தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக கிடைக்கும் மிதமான மழை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக” கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement