அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல் கருணாரத்ன,
நெல், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் ஆகிய 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
அரச திறைசேரியில் உள்ள பணத்திற்கு இழப்பீடு வழங்கவும், நிலைமையை கருத்தில் கொண்டு, அமைச்சரவையிடம் கோரிக்கை வைக்க தயாராக உள்ளோம்.
மோசமான வானிலை இந்த நாட்டில் விவசாயத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய பருவத்துக்காக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் உட்பட பல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், வடக்கு, வடமத்திய, கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தற்போது பெருமளவான விவசாய நிலங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் - விவசாய பிரதி அமைச்சரின் அறிவிப்பு அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த நாமல் கருணாரத்ன,நெல், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் ஆகிய 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. அரச திறைசேரியில் உள்ள பணத்திற்கு இழப்பீடு வழங்கவும், நிலைமையை கருத்தில் கொண்டு, அமைச்சரவையிடம் கோரிக்கை வைக்க தயாராக உள்ளோம்.மோசமான வானிலை இந்த நாட்டில் விவசாயத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.முக்கிய பருவத்துக்காக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் உட்பட பல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், வடக்கு, வடமத்திய, கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தற்போது பெருமளவான விவசாய நிலங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.