2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனது சட்டத்தரணி ஊடாக சிவில் மேல் நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
கைது செய்வதை தடுக்க ரிட் மனு தாக்கல் செய்தார் தேசபந்து 2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனது சட்டத்தரணி ஊடாக சிவில் மேல் நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.