தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோட்சவம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், நேற்றையதினம்(18) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
தேர்த் திருவிழாவினை காண நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் செல்வச்சந்நிதி ஆலயத்தில் திரண்டனர்.
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய திருடர்கள், பக்தர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடியுள்ளனர்.
இவ்வாறு நேற்றைய தேர்த்திருவிழாவில் மாத்திரம் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.
செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் திடீரென மாயமான தங்க நகைகள்- பக்தர்கள் அதிர்ச்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோட்சவம் தற்போது இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில், நேற்றையதினம்(18) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.தேர்த் திருவிழாவினை காண நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் செல்வச்சந்நிதி ஆலயத்தில் திரண்டனர்.இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய திருடர்கள், பக்தர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடியுள்ளனர்.இவ்வாறு நேற்றைய தேர்த்திருவிழாவில் மாத்திரம் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.