• Apr 30 2024

மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளை வாசிப்பதில் சிரமமா? இதோ புதிய வழி!

Tamil nila / Dec 20th 2022, 10:39 pm
image

Advertisement

பொதுவாக மருத்துவர்களினால் எழுதப்படும் மருந்துச் சீட்டுக்கள், நோய் குறித்த அறிக்கைகளை என்பனவற்றை வாசித்து அறிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகவே காணப்படுகின்றது.


பார்மசிகளில் பணியாற்றுவோர் மட்டுமே இந்த எழுத்துக்களை புரிந்து கொண்டு மருந்து வகைகளை வழங்குகின்றனர்.மருத்துவர்களின் இந்த மோசமான கையெழுத்து காரணமாக சில வேளைகளில் பார்மசிகளில் பணியாற்றுவோரும் தடுமாறிப் போகின்றனர்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மருத்துவர்களின் மருந்துச் சீட்டுக்கள் டிகோட் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மருத்துவரின் மருந்துச் சீட்டு புகைப்படம் எடுத்து விசேட செயலியில் ஸ்கேன் செய்வதன் மூலம், அந்த சீட்டில் எழுதப்பட்டுள்ள மருந்து வகைகள் பற்றிய விபரங்களை வழங்கும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.தற்பொழுது இந்த செயலி பரீட்சிக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது. மருத்துவர்களின் கையெழுத்தை வாசித்து மருந்து வகைகளை பட்டியலிடும் முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.


எவ்வாறெனினும் வெறுமனே தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இவ்வாறு மருந்துகளை வழங்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளை வாசிப்பதில் சிரமமா இதோ புதிய வழி பொதுவாக மருத்துவர்களினால் எழுதப்படும் மருந்துச் சீட்டுக்கள், நோய் குறித்த அறிக்கைகளை என்பனவற்றை வாசித்து அறிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகவே காணப்படுகின்றது.பார்மசிகளில் பணியாற்றுவோர் மட்டுமே இந்த எழுத்துக்களை புரிந்து கொண்டு மருந்து வகைகளை வழங்குகின்றனர்.மருத்துவர்களின் இந்த மோசமான கையெழுத்து காரணமாக சில வேளைகளில் பார்மசிகளில் பணியாற்றுவோரும் தடுமாறிப் போகின்றனர்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மருத்துவர்களின் மருந்துச் சீட்டுக்கள் டிகோட் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மருத்துவரின் மருந்துச் சீட்டு புகைப்படம் எடுத்து விசேட செயலியில் ஸ்கேன் செய்வதன் மூலம், அந்த சீட்டில் எழுதப்பட்டுள்ள மருந்து வகைகள் பற்றிய விபரங்களை வழங்கும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.தற்பொழுது இந்த செயலி பரீட்சிக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது. மருத்துவர்களின் கையெழுத்தை வாசித்து மருந்து வகைகளை பட்டியலிடும் முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.எவ்வாறெனினும் வெறுமனே தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இவ்வாறு மருந்துகளை வழங்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement