• May 17 2024

மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை...! கமால்தீன் ஹம்தானுக்கு புத்தளத்தில் கௌரவம்...!

Sharmi / Apr 29th 2024, 3:47 pm
image

Advertisement

தியத்தலாவையில் அண்மையில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 போட்டியில் 125CC மோட்டார் சைக்கிள் ஓட்ட போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற புத்தளம் கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான் கணமூலை மக்கள் சார்பில் நேற்று (28) பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதுரங்குளி - கணமூலை கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய விளையாட்டு மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் என்பன நேற்று (28) கனமூலை சேகு அலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது,  கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான், தியதலாவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் பல முன்னணி வீரர்களுடன் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டியதுடன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் குறித்த வீரரை கணமூலை மக்கள் சார்பில் கௌரவிக்கும் வகையில் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் அன்சார் மற்றும் கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அஸ்ரின் அலாவுதீன் ஆகியோர் மக்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

இதேவேளை, கணமூலையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் விளையாட்டு போட்டியில் அதிதிகளாக கலந்துகொண்ட பலரும் இவருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தமையை அவதானிக்க முடிந்தது.


மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை. கமால்தீன் ஹம்தானுக்கு புத்தளத்தில் கௌரவம். தியத்தலாவையில் அண்மையில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 போட்டியில் 125CC மோட்டார் சைக்கிள் ஓட்ட போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற புத்தளம் கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான் கணமூலை மக்கள் சார்பில் நேற்று (28) பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதுரங்குளி - கணமூலை கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய விளையாட்டு மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் என்பன நேற்று (28) கனமூலை சேகு அலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இதன்போது,  கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான், தியதலாவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் பல முன்னணி வீரர்களுடன் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டியதுடன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.இந்நிலையில் குறித்த வீரரை கணமூலை மக்கள் சார்பில் கௌரவிக்கும் வகையில் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் அன்சார் மற்றும் கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அஸ்ரின் அலாவுதீன் ஆகியோர் மக்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.இதேவேளை, கணமூலையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் விளையாட்டு போட்டியில் அதிதிகளாக கலந்துகொண்ட பலரும் இவருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தமையை அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement