• May 16 2024

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இடமாற்றம்...!

Sharmi / Apr 29th 2024, 3:37 pm
image

Advertisement

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இதுவரை காலமும் இயங்கிய இடத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இல.01, 3ஆம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நீண்ட காலமாக இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து இல. 42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் (42,Temple Road, Jaffna) முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய அலுவலகமானது பிரதான வீதியிலிருந்து கோவில் வீதியில் 150 மீற்றர் தூரத்திலும், வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கிய கோவில் வீதியில் 50 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் சேவைகளை பெறுவதற்காக மக்கள், மேற்படி முகவரியில் இருக்கும் புதிய அலுவலகத்தை நாட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இடமாற்றம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இதுவரை காலமும் இயங்கிய இடத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இல.01, 3ஆம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நீண்ட காலமாக இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து இல. 42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் (42,Temple Road, Jaffna) முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.புதிய அலுவலகமானது பிரதான வீதியிலிருந்து கோவில் வீதியில் 150 மீற்றர் தூரத்திலும், வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கிய கோவில் வீதியில் 50 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் சேவைகளை பெறுவதற்காக மக்கள், மேற்படி முகவரியில் இருக்கும் புதிய அலுவலகத்தை நாட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement