• Oct 30 2024

தினேஸ் ஷாப்டரின் உடல் தோண்டியெடுக்கப்படவுள்ளது – தொடரும் மர்மம்.! samugammedia

Tamil nila / May 20th 2023, 5:18 pm
image

Advertisement

பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் உடலை எதிர்வரும் 25 ஆம் திகதியன்று தோண்டியெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐவரடங்கிய விசேட வைத்திய குழாம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, தினேஸ் ஷாப்டரின் உடலை தோண்டியெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையாகவும் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொரளை பொது மயானத்தில் அவரது காரில் கழுத்து இறுகக்கட்டப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஸ் ஷாப்டர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தினேஸ் ஷாப்டரின் உடல் தோண்டியெடுக்கப்படவுள்ளது – தொடரும் மர்மம். samugammedia பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் உடலை எதிர்வரும் 25 ஆம் திகதியன்று தோண்டியெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.ஐவரடங்கிய விசேட வைத்திய குழாம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, தினேஸ் ஷாப்டரின் உடலை தோண்டியெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது தடவையாகவும் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.பொரளை பொது மயானத்தில் அவரது காரில் கழுத்து இறுகக்கட்டப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.இதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஸ் ஷாப்டர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement