• Feb 05 2025

அனர்த்த கால நிவாரணம் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்- ஜாட்சன் பிகிறாடோ வேண்டுகோள்..!

Sharmi / Dec 10th 2024, 7:55 pm
image

அனர்த்த காலத்திலோ அல்லது அனர்த்த முன்னெச்சரிக்கையான காலப் பகுதிகளில் கடலுக்கு செல்லாத மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜான்சன் பிரிறாடோ வேண்டுகோள் விடுத்தார். 

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் வடக்கு கிழக்கு இளம் மீனவ கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அண்மையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டமையால் மீனவர்கள் கடலுக்கு செல்லாது பாதுகாப்பாக வீடுகளில் தங்கி இருந்தார்கள். 

உண்மையில் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் வரவேற்கின்ற நிலையில், வடக்கு கிழக்கில் வாழுகின்ற பெரும்பாலான மீனவர்கள் கரையோர மீன்பிடியை நம்பியே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நேரங்களில் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

ஏனெனில் ஆழ்கடல் மீன்படியில் ஈடுபடுபவர்கள் கடலில் தரித்து நின்று மீன்பிடியில் ஈடுபடுகின்ற நிலையில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவ மக்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்குள் செல்ல வேண்டும்.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் கடலுக்குள் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

ஆகவே, எதிர்வரும் வருடம் ஆரம்பப் பகுதியில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் மீனவ மக்களின் நலன் கருதி அனத்த காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


அனர்த்த கால நிவாரணம் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்- ஜாட்சன் பிகிறாடோ வேண்டுகோள். அனர்த்த காலத்திலோ அல்லது அனர்த்த முன்னெச்சரிக்கையான காலப் பகுதிகளில் கடலுக்கு செல்லாத மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜான்சன் பிரிறாடோ வேண்டுகோள் விடுத்தார். யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் வடக்கு கிழக்கு இளம் மீனவ கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அண்மையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டமையால் மீனவர்கள் கடலுக்கு செல்லாது பாதுகாப்பாக வீடுகளில் தங்கி இருந்தார்கள். உண்மையில் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் வரவேற்கின்ற நிலையில், வடக்கு கிழக்கில் வாழுகின்ற பெரும்பாலான மீனவர்கள் கரையோர மீன்பிடியை நம்பியே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நேரங்களில் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஏனெனில் ஆழ்கடல் மீன்படியில் ஈடுபடுபவர்கள் கடலில் தரித்து நின்று மீன்பிடியில் ஈடுபடுகின்ற நிலையில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவ மக்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்குள் செல்ல வேண்டும்.புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் கடலுக்குள் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.ஆகவே, எதிர்வரும் வருடம் ஆரம்பப் பகுதியில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் மீனவ மக்களின் நலன் கருதி அனத்த காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement