• Sep 09 2025

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியருக்கு ஒழுக்காற்று விசாரணை!

shanuja / Sep 8th 2025, 6:40 pm
image

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ, ஒழுக்காற்று விசாரணைக்காக அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 


கடந்த காலத்தில் நிலவிய மருந்து பற்றாக்குறை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இது தொடர்பில் நாம் வைத்தியரிடம் வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், 


சுகாதார அமைச்சின் அழைப்புக்கு அமைய தாம் அரச சேவை ஆணைக்குழுவுக்கு வந்ததாக தெரிவித்தார். 


15 பேர் உயிரிழப்புக்கு காரணமான எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தின் போது, விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தமது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது களத்தில் பணியாற்றி பலருக்கு சிகிச்சை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியருக்கு ஒழுக்காற்று விசாரணை பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ, ஒழுக்காற்று விசாரணைக்காக அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் நிலவிய மருந்து பற்றாக்குறை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நாம் வைத்தியரிடம் வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சின் அழைப்புக்கு அமைய தாம் அரச சேவை ஆணைக்குழுவுக்கு வந்ததாக தெரிவித்தார். 15 பேர் உயிரிழப்புக்கு காரணமான எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தின் போது, விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தமது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது களத்தில் பணியாற்றி பலருக்கு சிகிச்சை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement