• Oct 30 2024

வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 1:56 pm
image

Advertisement

வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(16) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு சில கிராம அலுவலர் பிரிவுகளை பிரிப்பதற்கும், சில பிரிவுகளை இணைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வவுனியா பிரதேச செயலக பிரிவில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், கூமாங்குளம், உக்குளாங்குளம், மகாறம்பைக்குளம் என்பனவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் என்பனவும் தனி கிராம அலுவர் பிரிவுகளாக பிரிப்பதற்கும்,  கலாபோகஸ்வேவ உள்ளிட்ட 4 சிங்கள குடியேற்ற கிராமங்களின் நிர்வாக நடவடிக்கையை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 



வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்.samugammedia வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(16) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு சில கிராம அலுவலர் பிரிவுகளை பிரிப்பதற்கும், சில பிரிவுகளை இணைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது. வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வவுனியா பிரதேச செயலக பிரிவில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், கூமாங்குளம், உக்குளாங்குளம், மகாறம்பைக்குளம் என்பனவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் என்பனவும் தனி கிராம அலுவர் பிரிவுகளாக பிரிப்பதற்கும்,  கலாபோகஸ்வேவ உள்ளிட்ட 4 சிங்கள குடியேற்ற கிராமங்களின் நிர்வாக நடவடிக்கையை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement